சட்டவிரோதமாக கொண்டு வரமுற்பட்ட ஒரு தொகை செய்மதி தொடர்பாடல் உபகரணங்கள்  கைப்பற்றப்பட்டுள்ளன

சட்டவிரோதமாக கொண்டு வரமுற்பட்ட ஒரு தொகை செய்மதி தொடர்பாடல் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

சட்டவிரோதமாக கொண்டு வரமுற்பட்ட ஒரு தொகை செய்மதி தொடர்பாடல் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2015 | 10:32 am

சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டு வரமுற்பட்ட ஒரு தொகை செய்மதி தொடர்பாடல் உபகரணங்கள் சிலவற்றை கட்டுநாயக்க விமானநிலையத்தின் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதன் போது 335 செய்மதி தொடர்பாடல் உபகரணங்களும் 81 தன்னியக்க கட்டுப்பாட்டுக் கருவிகளும் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார்.

தம்பதிவ யாத்திரைக்குச் சென்று திரும்பிய யாத்திரிகர்களின் பயணப் பொதிகளில் இருறந்து இந்தப் பொருட்கள் மீட்கப்பட்டதாக சுங்கப் பிரிவின் பேச்சாளர் தெரிவித்தார்.

தம்பதிவ யாத்திரையை ஏற்பாடு செய்கின்றவரினால் இந்தப் பொருட்கள் பெறப்பட்டு அவை யாத்திரிகர்களின் பயணப்பொதிகள் வைக்கப்பட்டு எடுத்து வந்துள்ளதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்தப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் பெறப்பட வேண்டும் என்பதோடு தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிடமிருந்தும் அனுமதிப்பத்திரங்கள் பெற வேண்டும் என்பதோடு 13,48,000 ரூபா பெறுமதியான பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் வறகாப்பொல பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்தப் பொருட்களை சுங்கப் பிரிவினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி  குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்