சஜின் வாஸிற்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில்

சஜின் வாஸிற்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில்

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2015 | 8:50 pm

பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவிற்கு சொந்தமானது என கூறப்படும், விமான நிறுவனமொன்றினால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்ற, பொருட்களை கொண்டு செல்லும் விமானமொன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவிற்கு சொந்தமானது என கூறப்படும் விமான நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு அமைவாக குறித்த விமானம் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் பொருட்களை விநியோகிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தளம் வெளியிட்டுள்ள புகைப்படம் மற்றும் தகவல்களுக்கு அமைவாக பொயிங் 727 ரக விமானம், பொருட்களை ஏற்றிச் செல்லும் விமானமாகும்.

இந்த ரக விமானங்கள் தற்போது தயாரிக்கப்படாத நிலையில், இதன் விலை 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டுகின்றது.

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துடன், ஒன்றிணைந்து சார்க் வலய நாடுகளுக்கு பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக சஜின் டி வாஸ் குணவர்தனவிற்கு சொந்தமானதாக கூறப்படும் விமான நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் லங்கன் கார்கோ என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் சுமார் ஒரு வருட காலமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொருட்கள் விநியோக பிரிவில் ஸ்ரீ லங்கன் விமான சேவை எனும் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

விமான நிலைய அதிகாரிகளின்  தகவல்களின் பிரகாரம் இவ்வாறான விமானமொன்றை நிறுத்தி வைப்பதற்கு மாதம் ஒன்றுக்கு நான்காயிரம் டொலர்கள் செலுத்தப்பட வேண்டும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்