கொழும்பு பஸ்டியன் மாவத்தை பஸ் நிலைய ஊழியர்கள்  பணி பகிஷ்கரிப்பில்

கொழும்பு பஸ்டியன் மாவத்தை பஸ் நிலைய ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில்

கொழும்பு பஸ்டியன் மாவத்தை பஸ் நிலைய ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில்

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2015 | 12:20 pm

கொழும்பு பஸ்டியன் மாவத்தையில் இருந்து தூர சேவைக்கு பயணத்தை ஆரம்பிக்கும் பஸ் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

11 கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் தனியார் பஸ் ஊழியர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக தூர பஸ் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

11 கோரிக்கைகள் குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தாமையால் பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்ததாக தேசப்பற்றுள்ள பஸ் சாரதிகள் சங்கம் மற்றும் நடத்துனர்களின் தேசிய அமைப்பின் தலைவர் ஊவ தென்னே சுமன தேரர் தெரிவித்தார்.

பஸ்களை நிறுத்தி வைப்பதற்கு தேவையான இடவசதி இல்லாமை, சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு தேவையான வசதிகள் இல்லாமை, முறையற்ற விதத்தில் நிதி சேகரித்தல் மற்றும் முறைப்பாடுகளை விசாரணை செய்யாது தண்டனை வழங்குதல் போன்ற முறையற்ற செயற்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு இந்த பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இருப்பினும் இந்தப் பகிஸ்கரிப்பு நியாயமற்றது என உள்ளகப் போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

சீருடை அணிய முடியாது என்று கூறி இந்தப் பகிஸ்கரிப்பை முன்னெடுப்பதாவும் இது குறித்து அமைச்சுக்கோ போக்குவரத்து ஆணைக்குழுவுக்கோ அறிவிக்கவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதால் தனியார் பஸ்களுக்கான அனுமதிப்பத்திரம் குறித்து நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை பயணிகளின் நலன்கருதி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக உள்ளக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்துபண்டார தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்