கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு வழங்கிய ஆதரவை ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு வழங்கிய ஆதரவை ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2015 | 2:28 pm

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமடுக்கு  வழங்கிய ஆதரவை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 6 உறுப்பினர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.

முன்னாள் அமைச்சரான  விமலவீர திஸாநாயக்க , உதுமா லெப்பை , எம்.எல்.ஏ,அமீர் , டப்ள்யூ. டி. வீரசிங்க ,. டி.எம் .ஜயசேன மற்றும் தேசிய சுந்திர முன்னணி உறுப்பினர்
ஜயந்த விஜேசேகர ஆகிய 6 உறுப்பினர்களும்  தமது விலகல் கடிதத்தை கையளித்துள்ளரனர்.

முதலமைச்சருக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து இதற்கு முன்னர் ஆளுநருக்கு வழங்கியிருந்த சத்தியக்கடதாசியை வாபஸ் பெற்றுக் கொள்வதாக, மீண்டும் சத்தியக்கடதாசி மூலம் அறிவித்துள்ளனர்.

கிழக்கு தமாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ, குறித்த சத்தியக் கடதாசிகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்