காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் திருமலை அமர்வு இன்று

காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் திருமலை அமர்வு இன்று

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2015 | 11:59 am

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்டத்திற்கான மூன்றாம் நாள் அமர்வுகள் இன்றும் நாளையும் திருகோணமலை பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளன

நேற்று குச்சவெளியில் இடம்பெற்ற அமர்வில் 53 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 100 பேரின் சாட்சியங்கள் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன

குச்சவெளி அமர்வில் புதிதாக 73 பேரின்  சாட்சியங்கள் பதிவானதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச தெரிவித்தார்.

இதேவேளை குச்சவெளியில் இடம்பெற்ற அமர்வுகளின் போது சிலர் ஆணைக்குழுவின் அமர்வை புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்