ஐ.நா அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம் ஜெப்ரி ஃபெல்ட்மன் இன்று யாழ் விஜயம்

ஐ.நா அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம் ஜெப்ரி ஃபெல்ட்மன் இன்று யாழ் விஜயம்

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2015 | 11:53 am

யாழ் குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம் ஜெப்ரி ஃபெல்ட்மன் வடமாகாண முதலமைச்சரை இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

வடமாகாண முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் வடமாகாண அமைச்சர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

அண்மையில் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பான பிரேரணை குறித்தும் இதன்போது ஐநா அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம் கேட்டறிந்துக்கொண்டார்.

இதேவேளை வடமாகாண ஆளுநர் எஸ் பலிஹக்காரவையும் ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம் ஜெப்ரி ஃபெல்ட்மன் சந்தித்து கலந்துரையாடியதோடு இன்று காலை சிவில் சமுகப் பிரதிநிதிகளையும்  சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்