உலகக்கிண்ணம் 2015: இலங்கை வீரர்களின் துடுப்பாட்ட சாதனை ஒரு பார்வை

உலகக்கிண்ணம் 2015: இலங்கை வீரர்களின் துடுப்பாட்ட சாதனை ஒரு பார்வை

உலகக்கிண்ணம் 2015: இலங்கை வீரர்களின் துடுப்பாட்ட சாதனை ஒரு பார்வை

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2015 | 10:57 am

இம்முறை உலகக்கிண்ணத்தில்  நேற்று வரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் இலங்கை வீரர்களின் துடுப்பாட்டானது மிகச்சிறப்பானதாக உள்ளது.

அதிகூடிய ஓட்டங்களை குவித்துள்ளவர்கள் வரிசையில் சங்கக்கார 268 ஓட்டங்களைப் பெற்று முதலாமிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து திரிமன்னே மற்றும் டில்சான் ஆகியோர் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளனர். இதில் திரிமன்னே மொத்தமாக 256 ஓட்டங்களையும், டில்சான் 229 ஓட்டங்களையும் பெற்றுக்ககொண்டுள்ளனர்.

அதிகூடிய தனிப்பட்ட ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டவர்கள் வரிசையில் டில்சான் 161 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்திலும் திரிமன்னே 139 ஓட்டங்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

அதிகளவான நான்கு ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டவர் வரிசையில் சங்கக்கார 30 நான்கு ஓட்டங்களை மொத்தமாகப் பெற்று முதலிடத்திலுள்ளார். அத்துடன் இவரே 134.00 எனும் அதிகூடிய சராசரியையும் பெற்றுள்ளார்.

இரண்டு சதங்களைப் விளாசியுள்ள சங்கக்கார சதமடித்துள்ளவர்கள் வரிசையில் முதலிடத்திலும் 2 அரைச்சதங்களை பெற்றுள்ள திரிமன்னே இரண்டாம் இடத்திலுமுள்ளனர்.

எனினும் இலங்கை அணியினரின் பந்துவீச்சானது கூறும்படியாக அமையவில்லை என்பதுடன் பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு இன்னும் முன்னேறும் பட்சத்தில் இலங்கை அணியானது இம்முறை உலகக்கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்