இளைஞர்கள் காணாமல் போன சம்பவத்தில் இலங்கை கடற்படையினருக்கு தொடர்புள்ளதாக தகவல்

இளைஞர்கள் காணாமல் போன சம்பவத்தில் இலங்கை கடற்படையினருக்கு தொடர்புள்ளதாக தகவல்

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2015 | 7:12 pm

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் ​கொழும்பில் இளைஞர்கள் சிலர் காணாமல் போன சம்பவத்துடன் இலங்கை கடற்படையினர் தொடர்பு பட்டிருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை ஊடகப் போச்சாளர் கெப்டன் டி.கே.பி.தஸநாயக்கவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியதாக இன்று நடைப் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு பிரதேசத்தில் குறிப்பாக மட்டக்குளி, அதேபோன்று திருகோணமலை சிலர் காணாமல் போயுள்ளனர்.

இது திட்டமிட்ட குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ள போதிலும் 2010 ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்று பதிவாகியுள்ளது. இது குறித்து விசாரணைகளை நடத்திய சந்தர்ப்பத்தில் இலங்கை கடற்படையின் சில உறுப்பினர்கள் இதனுடன் தொடர்பு பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியிருந்தன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்