அம்பலங்கொடை துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

அம்பலங்கொடை துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

அம்பலங்கொடை துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2015 | 11:31 am

அம்பலங்கொடை மீட்டியாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு மூன்று விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கிப் பிரயோகம் நேற்று மாலை  இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தில் மீட்டியாகொட பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் அவரது மனைவியுமே உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த துப்பாக்கி  ரவைகள் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் இரசாயனப் பகுப்பாய்வுக்காவும் தடயவியல் பொலிஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரெஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது பலபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு இந்த துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்