போதைப்பொருட்களை சுற்றிவளைப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு விசேட பயிற்சி

போதைப்பொருட்களை சுற்றிவளைப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு விசேட பயிற்சி

போதைப்பொருட்களை சுற்றிவளைப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு விசேட பயிற்சி

எழுத்தாளர் Staff Writer

01 Mar, 2015 | 10:15 am

போதைப்பொருட்களை சுற்றிவளைப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு விசேட பயிற்சிகளை வழங்குவதற்கு தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

முதல் கட்டமாக 300 விசேட அதிரடிப்படை வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்கவுள்ளதாக அந்த சபையின் தலைவர் டொக்டர் நிலங்க சமரசிங்க குறிப்பிடுகின்றார்.

பயிற்றுவிக்கப்படும் உத்தியோகத்தர்களை அனைத்து மட்டங்களிலும் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்