சிம்பாப்வே ஜனாதிபதியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் யானை மற்றும் சிங்கக்கறி விருந்து(PHOTOS)

சிம்பாப்வே ஜனாதிபதியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் யானை மற்றும் சிங்கக்கறி விருந்து(PHOTOS)

சிம்பாப்வே ஜனாதிபதியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் யானை மற்றும் சிங்கக்கறி விருந்து(PHOTOS)

எழுத்தாளர் Staff Writer

01 Mar, 2015 | 3:27 pm

கடந்த 1980ம் ஆண்டு முதல் தொடர்ந்து 35 ஆண்டுகளாக சிம்பாப்வேயில் ரொபர்ட் முகாபே ஜனாதிபதியாக இருந்து வருகிறார்.

இவர் தனது 91- ஆவது பிறந்தநாளை விக்டோரியா போல்ஸ் பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடினார்.

தன பிறந்தநாள் விழாவில் பங்கேற்றவர்களுக்கு யானைகள் வெட்டி, சிங்கக்கறி விருந்து வழங்கப்பட்டது.

மேலும் பெரிய அளவிலான கேக்குகள் வெட்டப்பட்டு, காட்டெருமைக் கறியுடன் விருந்து பரிமாறப்பட்டது.

ரொபர்ட் முகாபே தான், உலகின் வயதான அரச தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சுமார் 10 லட்சம் டொலர்கள் செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த பிறந்தநாள் விருந்துக்காக ஏழை, எளிய மக்களிடமிருந்து பணம் மற்றும் பொருட்களை ஆளும்கட்சியினர் கட்டாய வசூல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

sim1

sim3

Zimbabwe Mugabe Birthday Celebrations

Zimbabwean President Robert Mugabe (2md


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்