காணி உரிமையுடன் தனி வீடுகளை அமைத்து தருமாறு கோரி மாத்தளையில் கவனயீர்ப்பு போராட்டம்

காணி உரிமையுடன் தனி வீடுகளை அமைத்து தருமாறு கோரி மாத்தளையில் கவனயீர்ப்பு போராட்டம்

காணி உரிமையுடன் தனி வீடுகளை அமைத்து தருமாறு கோரி மாத்தளையில் கவனயீர்ப்பு போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

01 Mar, 2015 | 1:47 pm

காணி உரிமையுடன் தனி வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்கள் மாத்தளை நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமூக நீதிக்கான மலையக அமைப்பின் ஏற்பாட்டில், மாத்தளை நகரிலுள்ள பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இன்று முற்பகல் 9.30 அளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமானது.

அடிப்படை வசதிகளின்றி லயின் குடியிருப்புகளில் நீண்டகாலமாக வாழ்ந்து வருவதுடன், பல்வேறு துன்ப துயரங்களையும் தாம் எதிர்நோக்கியுள்ளதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமக்கான வீடமைப்பு குறித்து பேச்சுவார்த்தைகள் மூலம் காலத்தை விரயமாக்காது சம்பந்தப்பட்டவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாத்தளை மாவட்டத்திலுள்ள தோட்டங்கள் சிலவற்றைச் சேர்ந்த சுமார் 300 க்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்

மாத்தளை பிரதான பஸ் தரிப்பிடத்திலிருந்து இரத்தோட்டை வீதியூடாக தனியார் பஸ் தரிப்பிடம் வரை கோஷங்களுடன் பேரணியாக சென்ற தொழிலாளர்கள் பின்னர் கலைந்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்