காணாமல்போன இளைஞர்கள் தொடர்பில் முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளரிடம் வாக்குமூலம் பதிவு

காணாமல்போன இளைஞர்கள் தொடர்பில் முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளரிடம் வாக்குமூலம் பதிவு

காணாமல்போன இளைஞர்கள் தொடர்பில் முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளரிடம் வாக்குமூலம் பதிவு

எழுத்தாளர் Staff Writer

01 Mar, 2015 | 9:29 am

இளைஞர்கள் சிலர் காணாமல்போனமை தொடர்பில் முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் டி.கே.பீ.தஸநாயக்கவிடம், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

2008 ஆம் ஆண்டு காணாமல்போன சம்பவமொன்று குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய டி.கே.பி. தஸநாயக்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

கொழும்பு மற்றும் திருகோணமலை பகுதிகளில் இளைஞர்கள் சிலர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்