இங்கிலாந்து 310 ஓட்டங்களை இலங்கைக்கு வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது

இங்கிலாந்து 310 ஓட்டங்களை இலங்கைக்கு வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது

இங்கிலாந்து 310 ஓட்டங்களை இலங்கைக்கு வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது

எழுத்தாளர் Staff Writer

01 Mar, 2015 | 8:20 am

11 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் 22 ஆவது லீக் போட்டியில் இன்று இலங்கை அணி இங்கிலாந்து அணியை சந்திக்கின்றது.

வெலிங்டனில் நடைபெற்று வரும் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்படுத்தாடி  310 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது..

இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு  309ஓட்டங்ளை பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஜோ ரூட் 121  ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

பந்துவீச்சில் சுரங்க லக்மால் , அஞ்சலோ மத்தியூஸ், டீ.எம்.டில்ஷான் , லசித் மாலிங்க , ரங்கன ஹேரத்   மற்றும் திஸர பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கட்டினை கைப்பற்றியிருந்தனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்