அரச ஊழியர்களுக்கான புதிய சம்பள வியூகமொன்றை தயாரிப்பதற்கு தீர்மானம்

அரச ஊழியர்களுக்கான புதிய சம்பள வியூகமொன்றை தயாரிப்பதற்கு தீர்மானம்

அரச ஊழியர்களுக்கான புதிய சம்பள வியூகமொன்றை தயாரிப்பதற்கு தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

01 Mar, 2015 | 10:51 am

அரச ஊழியர்களுக்கான புதிய சம்பள வியூகமொன்றை தயாரிப்பதற்கு அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

நிதி அமைச்சுடன் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே குறிப்பிடுகின்றார்.

அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட சம்பள அதிகரிப்புகள் மற்றும் சுற்றறிக்கைகள் காணரமாக அரசாங்க ஊழியர்களில் பல்வேறு தரங்களை சேர்ந்தவர்களுக்கு இடையில் பாரிய சம்பள குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன.

புதிய சம்பள வியூகம் ஊடாக இந்த குளறுபடிகள் நீங்குமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதன் பிரகாரம் அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் சமமான சம்பள அதிகரிப்பு உரித்தாகும் வகையில் விதிமுறைகளை கொண்டுவருவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் கூறினார்.

அடுத்த மாத இறுதிக்குள் புதிய சம்பள வியூகத்திற்கான நடவடிக்கைகளை நிறைவுசெய்வதுடன், இந்த செயற்பாட்டின்போது தொழிற் சங்கங்களின் யோசனைகளை பெற்றுக்கொள்வதற்கும் எண்ணியுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்