அரசாங்க காணிகள் தொடர்பில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஆராய ஆணைக்குழு நியமனம்

அரசாங்க காணிகள் தொடர்பில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஆராய ஆணைக்குழு நியமனம்

அரசாங்க காணிகள் தொடர்பில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஆராய ஆணைக்குழு நியமனம்

எழுத்தாளர் Staff Writer

01 Mar, 2015 | 12:06 pm

கடந்த காலப்பகுதியில் அரசாங்க காணிகள் தொடர்பில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஆராய்வதற்காக ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஒருவரை ஆணைக்குழுவிற்கு நியமித்துள்ளதாக காணி அமைச்சர் என்.கே.டி.எஸ். குணவர்தன தெரிவிக்கின்றார்.

அரசாங்க காணிகளை மோசடியாக விற்பனை செய்தமை உள்ளிட்ட பல்வேறு செயல்கள் குறித்து 60 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

எனவே அரசாங்க காணிகள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின், காணி அமைச்சுக்கு அதுகுறித்து அறிவிக்குமாறும் அமைச்சர் என்.கே.டி.எஸ். குணவர்தன கேட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்