அம்பலங்கொடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

அம்பலங்கொடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

அம்பலங்கொடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Mar, 2015 | 12:17 pm

அம்பலாங்கொடை, அகுரல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து அதிகாலை 3.35 அளவில் இடம்பெற்றதுள்ளது.

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும், காலி நோக்கி பயணித்த லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

லொறியின் சாரதியும், உதவியாரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த 9 பேரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்களில் நான்கு பாடசாலை மாணவர்களும் அடங்குகின்றதுடன், அவர்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்