வருமானத் தகவல்களைக் கோரி அனுப்பப்பட்ட ஆவணங்களை பூர்த்தி செய்து அனுப்பியுள்ளார் சஜின் வாஸ்

வருமானத் தகவல்களைக் கோரி அனுப்பப்பட்ட ஆவணங்களை பூர்த்தி செய்து அனுப்பியுள்ளார் சஜின் வாஸ்

வருமானத் தகவல்களைக் கோரி அனுப்பப்பட்ட ஆவணங்களை பூர்த்தி செய்து அனுப்பியுள்ளார் சஜின் வாஸ்

எழுத்தாளர் Bella Dalima

27 Feb, 2015 | 10:15 pm

பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் வருமானம் தொடர்பில், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் விசாரணைக்கு பதில் கிடைத்துள்ளதாக, திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வசந்தி மஞ்சநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவல்களை திணைக்களத்திற்கு வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினருக்கு 14 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

வருமானம் தொடர்பான தகவல்களை கோரி, கிவ் கிவ் என்ற ஆவணத்தை கடந்த 13 ஆம் திகதி சஜின் வாஸ் குணவர்தனவுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம், அனுப்பி வைத்திருந்தது.

அதன்படி, அவருக்கு வழங்கப்பட்டிருந்த 14 நாள் கால அவகாசம் இன்றுடன் நிறைவுபெறவிருந்தது.

நியூஸ்பெஸ்ட் இது தொடர்பில் சுட்டிக்காட்டிய தினத்திற்கு அடுத்த நாள், அதாவது நேற்று முன்தினம் (25) சஜின் வாஸ் குணவர்தன, குறித்த ஆவணங்களைப் பூர்த்தி செய்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அனுப்பியுள்ளதாக, ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

அதற்கமைய, அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் கூறினார்.

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு சொந்தமானது என கூறப்படும் விமான நிறுவனமொன்று, அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய நிதியை வழங்காதுள்ளதாக, ஊழலுக்கு எதிரான அமைப்பு
அண்மையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்திருந்தது.

விமானங்களை கொள்வனவு செய்வதற்கு குறித்த நிறுவனத்திற்கு, அரச வங்கியொன்று பாரியளவான நிதியை கடனாக வழங்கியுள்ளதாக அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதேவேளை, விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்திற்கு, குறித்த விமான நிறுவனம் வழங்க வேண்டிய நிதியை அறவிட முடிந்ததாக, சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நேற்று அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்