மேல்  மாகாண தேசிய நீ்ர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் அடையாள பணிபகிஷ்கரிப்பு

மேல் மாகாண தேசிய நீ்ர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் அடையாள பணிபகிஷ்கரிப்பு

மேல் மாகாண தேசிய நீ்ர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் அடையாள பணிபகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Feb, 2015 | 7:50 am

சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை என தெரிவித்து  மேல்  மாகாண தேசிய நீ்ர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் அடையாள பணிபகிஷ்கரிப்பை இன்று மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

தங்களுக்கான சம்பள உயர்வு திட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என தேசிய நீ்ர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் உபாலி ரத்நாயக்கா தெரிவிக்கின்றார்.

இன்று காலை 9 மணி தொடக்கம் அடையாள பணிபகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில்  நீ்ர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் செயலாளர் கருணாரத்ன ஹெட்டியாராச்சியிடம் நியூஸ்பெஸ்ட் வினவிய போது, திறைச்சேரி மற்றும் நிதி அமைச்சின் அனுமதி கிடைத்தவுடன் உடன் அமுலுக்கு வரும் வகையில் சம்பள உயர்வு வழங்கப்படும் என அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்