மட்டக்களப்பில் கண்டறியப்படாத நோயால் மாடுகள் உயிரிழப்பு

மட்டக்களப்பில் கண்டறியப்படாத நோயால் மாடுகள் உயிரிழப்பு

மட்டக்களப்பில் கண்டறியப்படாத நோயால் மாடுகள் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

27 Feb, 2015 | 7:56 pm

கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரமாகக் கொண்ட மட்டக்களப்பு மக்களுக்கு, கண்டறியப்படாத நோயினால் மாடுகள் உயிரிழப்பது பேரிடியாக உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச கால்நடை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட எல்லைக்கிராமமான ஒடியாமடுவில் கடந்த சில நாட்களாக நூற்றுக்கு மேற்பட்ட பசுக்களும், எருமைகளும் கண்டறியப்படாத நோயினால் உயிரிழந்துள்ளன.

இந்தப் பகுதியில் பெரும்பாலானோரின் ஜீவனோபாயத் தொழிலாக கால்நடை வளர்ப்பு இருக்கின்ற போதிலும் தற்போது அது கேள்விக்குறியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

52 கறவைப் பசுக்களும், 64 எருமைகளும் இனந்தெரியாத நோயினால் திடீரென உயிரிழந்ததாகவும், இதனால் தமது கால்நடைகளை வேறு இடத்திற்குக் கொண்டு செல்லும் நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் குறிப்பிட்டனர்.

கால்நடைகளின் முகம் வீங்குதல், உமிழ்நீர் வடிதல் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டு சில மணித்தியாலங்களில் அவை மரணிப்பதாகவும் இது குறித்து கால்நடை வைத்திய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பேராதனை கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளின் குருதி மாதிரியை மேலதிக பரிசோதனைகளுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்