புதுக்குடியிருப்பு, கரைத்துரைப்பற்று தேர்தல்: வாக்குப்பெட்டிகள் இன்று வாக்கெண்ணும் நிலையங்களுக்கு

புதுக்குடியிருப்பு, கரைத்துரைப்பற்று தேர்தல்: வாக்குப்பெட்டிகள் இன்று வாக்கெண்ணும் நிலையங்களுக்கு

புதுக்குடியிருப்பு, கரைத்துரைப்பற்று தேர்தல்: வாக்குப்பெட்டிகள் இன்று வாக்கெண்ணும் நிலையங்களுக்கு

எழுத்தாளர் Staff Writer

27 Feb, 2015 | 6:30 am

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துரைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தலின் பொருட்டு, வாக்குப் பெட்டிகளை இன்று  காலை ஏழு 15 அளவில் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.

முல்லைத்தீவு மத்திய கல்லூரியிலிருந்து வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம.எம். மொஹமட் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, தேர்தல் கடமைகளுக்கான அதிகாரிகளும், வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதுடன், கொழும்பிலிருந்து சென்றுள்ள விசேட அதிகாரிகள் குழுவும் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிடுகின்றார்.

நாளை காலை ஏழு மணி தொடக்கம் மாலை நான்கு மணிவரை வாக்ளிப்பு நடைபெறவுள்ளது.

எனவே உரிய காலப்பகுதிக்குள் வாக்காளர்கள் தங்களின் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்கு பதிவுகளில் ஈடுபடுமாறும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதுதவிர வாக்கெண்ணும் பணிகளிலும் சுமார் 300 உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துவதற்கு தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துரைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தலின் போது பாதுகாப்பு கடமைகளில் சுமார் 800 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

இதுதவிர தேர்தல் நடைபெறவுள்ள இரண்டு உள்ளூராட்சி மன்ற பிரிவுகளிலும் இன்று முதல் பொலிஸ் விசேட ரோந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துரைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் காலப்பகுதி முழுவதும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து இதுவரை எந்த விதமான முறைப்பாடுளும் பதிவாகவில்லை என்று அஜித் ரோஹண மேலும் கூறினார்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான தேர்தலின் மூலம் 9 உறுப்பினர்களும், கரைத்துரைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலின் மூலம் 11 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

பிரதேச சபைகளுக்கான தேர்தலில் வாக்களிப்பதற்கு 52 ஆயிரத்து 758 பேர் தகுதிபெற்றுள்ளனர்.

95 வாக்களிப்பு நிலையங்களில் இவர்கள் வாக்களிக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட ஆறு அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் இந்த தேர்தலுக்காக ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்