பின்னவல திறந்தவெளி மிருகக்காட்சி சாலை; மார்ச் இறுதியில் திறக்கப்படும் – நவீன் திசாநாயக்க

பின்னவல திறந்தவெளி மிருகக்காட்சி சாலை; மார்ச் இறுதியில் திறக்கப்படும் – நவீன் திசாநாயக்க

பின்னவல திறந்தவெளி மிருகக்காட்சி சாலை; மார்ச் இறுதியில் திறக்கப்படும் – நவீன் திசாநாயக்க

எழுத்தாளர் Bella Dalima

27 Feb, 2015 | 8:11 pm

சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க பின்னவலயில் புதிதாக அமையப்பெற்றுவரும் மிருகக்காட்சி சாலையைப் பார்வையிடுவதற்காக சென்றிருந்தார்.

பாரிய திறந்தவெளி மிருகக்காட்சி சாலையான இதில் முன்னெடுக்கப்படுகின்ற கட்டுமானப் பணிகள் குறித்து அமைச்சர் இதன் போது ஆராய்தார்.

இதன்போது, மார்ச் மாத இறுதியில் குறித்த மிருகக்காட்சி சாலையை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாகவும் கரடி மற்றும் முதலைகளுக்கான பகுதிகள் இன்னும்
அமைக்கப்படவில்லை எனவும் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.

தெஹிவல மிருகக்காட்சி சாலையை விட நவீன விதமாக பின்னவல மிருகக்காட்சிசாலை அமையப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்