சட்டவிரோத மணல் அகழ்வுகளைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

சட்டவிரோத மணல் அகழ்வுகளைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

சட்டவிரோத மணல் அகழ்வுகளைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

27 Feb, 2015 | 8:27 pm

சட்டவிரோதமாக நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற மண் மற்றும் மணல் அகழ்வுகளைத் தடுப்பதற்கு உரிய சட்ட நடவடிக்கையை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி, பொலிஸ் மாதிபருக்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.

இரத்தினபுரி பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் மக்கள் பிரிதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகஸ்தர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

சட்டவிரோத அகழ்வுகள், அனுமதிப் பத்திரமின்றிய மணல் விநியோகம் மற்றும் மாணிக்கக்கல் வர்த்தகங்கள் போன்றவை இந்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டன.

மணல் மற்றும் கல் என்பவை அனுமதிப் பத்திரம் இன்றி விநியோகிக்கப்பட்டால் நாட்டில் சூழல் பிரச்சினை ஏற்படும் என இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவ்வாறான நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

அத்துடன், சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபடுவதால் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களைத் தவிர்க்க வேண்டுமாயின் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வைத் தவிர்ப்பதே சிறந்தது எனவும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்