கல்குவாரிக்கு எதிராக போலி பிரசாரம்: ஊடக நிறுவனத்தின் விடுதியைக் குற்றஞ்சாட்டும் பிரதேச மக்கள்

கல்குவாரிக்கு எதிராக போலி பிரசாரம்: ஊடக நிறுவனத்தின் விடுதியைக் குற்றஞ்சாட்டும் பிரதேச மக்கள்

எழுத்தாளர் Bella Dalima

27 Feb, 2015 | 9:38 pm

ஊடக நிறுவனமொன்றுக்கு சொந்தமான விடுதியொன்று, கடுவளை கொரதொட்டை அந்ததொலகந்த கல் உடைக்கும் திட்டத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கும் வகையில் போலியான பிரசாரங்களை முன்னெடுப்பதாக பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அந்ததொலகந்த கல் உடைக்கும் நடவடிக்கை 30 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அப்போது 46 ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் தற்போது 10 முதல் 15 ஏக்கர் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கல் குவாரியில் பணியாற்றுகின்றமை மற்றும் அதற்கான உதவிகளை வழங்குகின்றமையினால் ஆயிரக்கணக்காக மக்கள் நன்மை பெற்று வருகின்றனர்.

சிலர் எதிர்ப்பைத் தெரிவித்த சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

எனினும், சிலர் அடிப்படையற்ற முறையில் எதிர்ப்பைத் தெரிவிக்க முயற்சிப்பதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், இந்த கல் குவாரியின் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, தற்போது எழுந்துள்ள பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக நேற்று முன்தினம் (25) நீதி பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க, பிரதேச செயலாளர், பொலிஸார் மற்றும் மதத் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.

இந்தத் திட்டத்தை நிறுத்துவதற்கான முயற்சிகளை சிலர் முன்னெடுப்பதாக பிரதேச மதத் தலைவர்கள் குறிப்பிட்டனர்.

எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கான அனுமதியை வழங்குவதாக இதன்போது பிரதி நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த கல் குவாரியின் பணிகளை தொடர்வதற்கு பிரதேச மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்