ஊர்காவற்துறை பகுதியில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

ஊர்காவற்துறை பகுதியில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

ஊர்காவற்துறை பகுதியில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Feb, 2015 | 12:18 pm

யாழ் ஊர்காவற்துறை மன்கும்பான் பகுதியில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடலில் நீராடச் சென்ற  சந்தர்பத்திலேயே குறித்த நபர் நீரிழ் மூழ்கியுள்ளார், அவரை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே அவர் உயிரிழந்துள்ளார்.

காரைநகர் பகுதியை சேர்ந்த 40 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.

சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்