உமா ஓயா திட்டம் தொடர்பில் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

உமா ஓயா திட்டம் தொடர்பில் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

உமா ஓயா திட்டம் தொடர்பில் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Feb, 2015 | 7:23 am

உமா ஓயாத் திட்டம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை சுற்றாடல் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் இறுதி அறிக்கை கிடைக்கும் என அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவிக்கின்றார்.

இதேவேளை, உமா ஓயா திட்டம் குறித்து சுற்றாடல் மற்றும் நிலத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்கான பத்து பேர் கொண்ட குழுவின் ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைகழகத்தின் புவிசரிதவியல் ஆய்வாளர்கள், புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியக அதிகாரிகள் , தேசிய கட்டட ஆய்வு நிலைய உத்தியோகஸ்தர்களும் இந்த குழுவில் அடங்குவதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அதிகார சபையின் அறிக்கை கிடைக்கும்வரை உமா ஓயா திட்டத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் உமா ஓயா திட்டத்தை முற்றிலும் நிறுத்துமாறு கோரி அண்மைகாலமாக பதுளையில் எதிர்பு ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்