இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த  இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த இந்திய மீனவர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

27 Feb, 2015 | 11:52 am

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த 86 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு கடற்பிராந்தியத்தின் முல்லைத்தீவு கடற்பரப்பில் நேற்றிரவு இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கட்டளைத்தளபதி  இந்திக சில்வா தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களின் பத்து படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்தாகவும் கட்டளைத்தளபதி இந்திக சில்வா கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்