மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370 அண்டார்டிகாவுக்கு கடத்தப்பட்டதா?

மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370 அண்டார்டிகாவுக்கு கடத்தப்பட்டதா?

மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370 அண்டார்டிகாவுக்கு கடத்தப்பட்டதா?

எழுத்தாளர் Staff Writer

25 Feb, 2015 | 9:37 am

கடந்த ஆண்டு 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம் அண்டார்டிகாவுக்கு கடத்தப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி மலேசியன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது.

அதன்பின்னர் அந்த விமானத்திற்கு என்ன நடந்தது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிர்.  எனினும் மாயமான விமானம் விபத்துக்குள்ளாகி விட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனினும் மாயமான விமானத்தை தேடும் பணி இன்னொரு பக்கம் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. மாயமான விமானத்தை 11 மாதங்களுக்கும் மேலாக தேடுவது வரலாற்றில் இதுதான் முதல் முறை.

இந்த நிலையில், மாயமான மலேசிய விமானம், அண்டார்டிகாவுக்கு செலுத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் எம்.எச்.370 விமானம் 3 முறை தனது பாதையில் இருந்து திசை திருப்பப்பட்டது. 3 ஆவது திருப்பத்தின்படி அண்டார்டிகா நோக்கி அந்த விமானம் சென்றிருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்க தாய்லாந்து இராணுவத்தினர் இணைந்து நடத்திய கூட்டு போர் பயிற்சியின்போது மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இன்னொரு தகவல் கூறுகிறது.

மலேசிய விமானத்தை வெகு தொலைவில் உள்ள தனது விமானப் படைத்தளமான டிகோ கார்சியாவில் கட்டாயப்படுத்தி அமெரிக்கா தரை இறக்கியதாக மற்றொரு தகவலும் வெளியாகி இருக்கிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்