310 ஓட்டங்களைப்  பெற்று மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

310 ஓட்டங்களைப் பெற்று மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

310 ஓட்டங்களைப் பெற்று மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2015 | 12:07 pm

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 310 ஓட்டங்களை எடுத்து வெற்றிப்பெற்றது.

311 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான அணி 39 ஓவர்களில் 160 ஓட்டங்களை பெற்றுக் கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
உலகக் கிண்ணப் போட்டிகளில் இன்று இடம்பெற்ற குழு பி பிரிவிற்கான போட்டியில் பாகிஸ்தான் அணியும் மேற்கிந்திய தீவுகள் அணியும்  மோதின.நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் போட்டி நடைபெற்றது.

நாணய சுழற்ச்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.  மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த கெயில் – ஸ்மித் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். கெயில் 4 ஓட்டங்களிலும் ஸ்மித் 23 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் களமிறங்கிய பிராவோ – ராம்டின் இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிராவோ 49 ஓட்டங்களை எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். களத்தில் இருந்த ராம்டின் 51 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்மிழந்தார்.

முதல் 4 ஓவர்களில் ஒரு ஓட்டத்தை எடுத்த நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி, பின்னர்  சொகிப் மசூத் மற்றும் உமர் அக்மல் இருவரும் ஆளுக்கு ஒரு அரை சதம் அடித்தனர்.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் 39 ஓவர்களில் 160 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்