தமிழக மீனவர்களின் படகுகளின் நிலை குறித்து இந்திய அதிகாரிகள் ஆய்வு

தமிழக மீனவர்களின் படகுகளின் நிலை குறித்து இந்திய அதிகாரிகள் ஆய்வு

தமிழக மீனவர்களின் படகுகளின் நிலை குறித்து இந்திய அதிகாரிகள் ஆய்வு

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2015 | 8:43 am

இலங்கையில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 81 படகுகளின் தற்போதைய நிலை தொடர்பில் இந்திய அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் குறித்த படகுகள் விடுவிக்கப்பட்டிருந்தன.

இலங்கை அதிகாரிகளின் பொறுப்பில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த படகுகளில் அநேகமானவை பழுதடைந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய குறித்த படகுகளை தமிழகத்திற்கு எடுத்துச் செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவிப் பணிப்பாளர் மற்றும் மீன்வளத்துறை ஆய்வாளர் ஆகியோர் படகுகளை நேரடியாக கண்காணித்துள்ளனர்.

பழுதடைந்துள்ள படகுகளை சரிசெய்து தமிழகத்திற்கு கொண்டு செல்வதற்காக விரைவில் தமிழகத்திலிருந்து மீனவர் குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்