நிவாரண விலைகளில் பொருட்களை விற்பனை செய்யத் தவறிய வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

நிவாரண விலைகளில் பொருட்களை விற்பனை செய்யத் தவறிய வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

நிவாரண விலைகளில் பொருட்களை விற்பனை செய்யத் தவறிய வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2015 | 4:27 pm

வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட நிவாரண விலைகளுக்கு அமைய பொருட்களை விற்பனை செய்யத் தவறிய 300 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் சட்டத்தை மீறும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புக்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அறிவிக்கப்பட்ட நிவாரணங்களை நுகர்வோருக்கு வழங்கத் தவறும் வர்த்தகர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் என அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஜே.ஏ.எம்.டக்ளஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய 1 9 7 7 என்ற அவசர அழைப்பு இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மக்கள் முறைப்பாடுகளை செய்ய முடியும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்