தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான நடமாடும் சேவை நாளை மஸ்கெலியாவில்

தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான நடமாடும் சேவை நாளை மஸ்கெலியாவில்

தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான நடமாடும் சேவை நாளை மஸ்கெலியாவில்

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2015 | 9:39 am

நுவரெலியா மாவட்ட செயலகமும், அம்பகமவ பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நடமாடும் சேவை நாளை மஸ்கெலியாவில் நடைவெறவுள்ளது.

மஸ்கெலியா சென்ஜோசப் கல்லூரியில் நடைபெறவுள்ள இந்த நடமாடும் சேவையின் ஊடாக பிறப்பு, இறப்பு. திருமண அத்தாட்சிப் பத்திரங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு காணி மற்றும் அரச ஆவணங்கள் தொடர்பான ஆலோசனைகள்  மக்களுக்கு வழங்கப்படவுள்ளதோடு இளைஞர்களுக்கான தொழிற் சந்தையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முதியோர் அடையாள அட்டையும்  நாளைய தினம் இலவசமாக விநியோகிக்கப்படும் என அம்பகமுவ பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்