டன்பார் தோட்டத்தில் தீ விபத்து

டன்பார் தோட்டத்தில் தீ விபத்து

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2015 | 3:16 pm

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்ப்பட்ட  டன்பார் தோட்டத்தில், இன்று முற்பகல் ஏற்பட்ட தீ விபத்தினால் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த தீ விபத்தினால் இரண்டு தொழிலாளர்களின் குடியிருப்புக்கள் எரிந்து நாசமடைந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தோட்ட உத்தியோகத்தரின் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தீ பரவியமைக்கான காரணம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்