100 நாள் வேலைத்திட்டத்தைச் செயற்படுத்த அனைத்து கட்சிகளும் ஆதரவு: ஜனாதிபதி

100 நாள் வேலைத்திட்டத்தைச் செயற்படுத்த அனைத்து கட்சிகளும் ஆதரவு: ஜனாதிபதி

100 நாள் வேலைத்திட்டத்தைச் செயற்படுத்த அனைத்து கட்சிகளும் ஆதரவு: ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2015 | 10:02 am

மனித உரிமைகளை பாதுகாத்து ஜனநாயக கட்டமைப்பை உருவாக்குவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள 100 நாள் திட்டத்தை செயற்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் வளங்களை பெற்றுக்கொடுக்கும் விசேட கலந்துரையாடலில் நேற்று கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே ஜனாதிபதி இதனைக் தெரிவத்துள்ளார்.

100 நாள் திட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த செயற்றிட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் மக்களின் செலவுகளை குறைத்து வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த செயற்றிட்டத்தின் ஊடாக சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்