ஐ.எஸ் தீவிரவாதிகளால்  நடத்தப்பட்ட தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

ஐ.எஸ் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

ஐ.எஸ் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2015 | 2:25 pm

ஐ.எஸ் தீவிரவாதிகள் முகாம்கள் மீது எகிப்து நடத்திய வான்வழி தக்குதலுக்கு எதிராக ஐ.எஸ் தீவிரவாதிகளினால் லிபியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் 45  பேர் கொல்லப்பட்டுள்ளனர். அண்மையில் எகிப்து நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் 21 பேரை தலைவெட்டி கொலை செய்த, ஐ.எஸ் தீவிரவாதிகளை பழிவாங்கும் வகையில் பிரத்னா என்ற இடத்தில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக கருதப்பட்ட நிலையில் குவிப்புரா என்ற இடத்தில் 3 கார்களில் கொண்டுவரப்பட்ட வெடிபொருட்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் வெடிக்க செய்ததில் 45 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே எகிப்து தலைநகர் கெய்ரோவில் பத்திரிகையாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒழிக்க அரபு நாடுகள் ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இல்லையெனில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் வேகமாக பரவும் என்றும் அவர் எச்சரித்தார்.
துருக்கி உள்ளிட சில நாடுகளின் குறிப்பிட்ட பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், அந்த பகுதியை ‘இஸ்லாமிக் ஸ்டேட்’ என்று அழைக்கின்றனர். அண்மையில் ஜப்பான் மற்றும் லெபனான் நாடுகளைச் சேர்ந்தவர்களைக் விரவாதிகள் கொன்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்