உலக முடிவில் தவறி வீழ்ந்தவர் மீட்கப்பட்டார்(Video)

உலக முடிவில் தவறி வீழ்ந்தவர் மீட்கப்பட்டார்(Video)

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2015 | 3:52 pm

நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் பிளைன்ஸ் தேசிய பூங்காவிலுள்ள உலக முடிவை பார்வையிடச் சென்று தவறி வீழ்ந்த  வௌிநாட்டவரை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.

நெதர்லாந்தைச்  சேர்ந்த குறித்த நபர் மரக்கிளையொன்றில் தொங்கிக் கொண்டிருந்த போது அவரை மீட்டதாக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. மீட்புப் பணிக்கு ​ஹெலிகொப்டர் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது.

காப்பாற்றப்பட்ட நபர் சிகிச்சைகளுக்காக தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்