33 கோடி ரூபா மின்கட்டண பாக்கியால் வாழைச்சேனை கடதாசி ஆலையின்  மின்சாரம் துண்டிப்பு

33 கோடி ரூபா மின்கட்டண பாக்கியால் வாழைச்சேனை கடதாசி ஆலையின் மின்சாரம் துண்டிப்பு

33 கோடி ரூபா மின்கட்டண பாக்கியால் வாழைச்சேனை கடதாசி ஆலையின் மின்சாரம் துண்டிப்பு

எழுத்தாளர் Bella Dalima

14 Feb, 2015 | 3:46 pm

மட்டக்களப்பு, வாழைச்சேனை கடதாசி ஆலைக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதால், ஆலையின் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இதன் காரணமாக ஆலையில் பணிபுரிகின்ற சுமார் 150 க்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபைக்கு 33 கோடி ரூபாவிற்கும் அதிக மின்கட்டணத்தை, வாழைச்சேனை கடதாசி ஆலை செலுத்த வேண்டியுள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, தங்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகளும் உரிய முறையில் செலுத்தப்படவில்லை என தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து ஆலையின் நிறைவேற்று பொதுநல உத்தியோகத்தர் எம். முபாரக்கிடம் நாம் வினவியபோது, ஆலையின் நிர்வாகத்திற்குப் பொறுப்பாகவிருந்த முகாமையாளர், மின் கட்டணம் மற்றும் தொழிலாளர்களின் கொடுப்பனவுகளை உரிய முறையில் செலுத்தவில்லை என அவர் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய நிலைமையை சரிசெய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்