பத்து இராணுவ உத்தியோகஸ்தர்களை மீண்டும் சேவையில் அமர்த்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

பத்து இராணுவ உத்தியோகஸ்தர்களை மீண்டும் சேவையில் அமர்த்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

பத்து இராணுவ உத்தியோகஸ்தர்களை மீண்டும் சேவையில் அமர்த்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

எழுத்தாளர் Bella Dalima

14 Feb, 2015 | 3:18 pm

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சேவையிலிருந்து கட்டாய விடுமுறையில் அனுப்பிவைக்கப்பட்ட இராணுவத்தின் மேஜர் ஜெனரல் ஒருவர் உள்ளிட்ட பத்து இராணுவ உத்தியோகஸ்தர்களை மீண்டும் சேவையில் அமர்த்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதி செயலாளர் பீ.பி அபயகோன் ஊடாக பாதுகாப்பு செயலாளரினால் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்கவிற்கு நேற்று (13) அறிவிக்கப்பட்டுள்ளதாக பதில் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.

இராணுவத் தளபதியினால் இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட இராணுவப் படையணிகளுக்கு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மீண்டும் சேவையில் அமர்த்தப்படவுள்ள இராணுவ உத்தியோகஸ்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பதில் இராணுவப் பேச்சாளர் கூறினார்.

இந்த நியமனங்கள் நேற்றிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை இராணுவத் தளபதியை சந்திக்குமாறு சேவைக்கு மீண்டும் அமர்த்தப்பட்டுள்ள உத்தியோகஸ்தர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மீள சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளவர்களில் மேஜர் ஜெனரல் ஒருவரும் 05 பிரிகேடியர்களும், கேர்ணல் ஒருவரும், இரண்டு கெப்டன்களும் அடங்குவதாக பதில் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்