துமிந்த சில்வா மூலம் வெளியான தகவல்களை ஆராய விசேட பொலிஸ் குழுக்கள் நியமனம்

துமிந்த சில்வா மூலம் வெளியான தகவல்களை ஆராய விசேட பொலிஸ் குழுக்கள் நியமனம்

துமிந்த சில்வா மூலம் வெளியான தகவல்களை ஆராய விசேட பொலிஸ் குழுக்கள் நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

14 Feb, 2015 | 2:58 pm

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மூலம் வெளியான தகவல்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த விசாரணைக் குழுக்கள் நேற்று முன்தினம் (12) முதல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதுதவிர, பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான வெலேசுதா கைதாகி ஒருமாத காலம் கடந்துள்ள நிலையில், அவரிடம் பெற்ற வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பில் மேலும் சுமார் 75 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள இந்த அனைத்து வாக்குமூலங்களையும் ஆராய்ந்து அவற்றின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்