உலகக்கிண்ணம்: இலங்கையை 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து

உலகக்கிண்ணம்: இலங்கையை 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து

உலகக்கிண்ணம்: இலங்கையை 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து

எழுத்தாளர் Bella Dalima

14 Feb, 2015 | 4:06 pm

உலகக்கிண்ண ஏ-பிரிவு ஆட்டத்தில் இலங்கையை 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

கிறைஸ்ட் சர்ச்சில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நியூசிலாந்து 2 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

நியூசிலாந்து அணி மெக்கல்லம் (65), கேன் வில்லியம்சன் (57), கோரி ஆண்டர்சன் (75) ஆகியோரது பங்களிப்பின் மூலம் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 331 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 124 ஓட்டங்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையிலிருந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய, 46.1 ஓவர்களில் 233 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

திரிமானே அதிகபட்சமாக 65 ஓட்டங்களை இலங்கைக்குப் பெற்றுக்கொடுத்தார்.

ஆட்ட நாயகனாக கோரி ஆண்டர்சன் தெரிவுசெய்யப்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்