‘புகலிடக் கோரிக்கையாளர்களின் பிள்ளைகளை தடுத்து வைப்பது சர்வதேச சட்டங்களை மீறும் செயல்’

‘புகலிடக் கோரிக்கையாளர்களின் பிள்ளைகளை தடுத்து வைப்பது சர்வதேச சட்டங்களை மீறும் செயல்’

‘புகலிடக் கோரிக்கையாளர்களின் பிள்ளைகளை தடுத்து வைப்பது சர்வதேச சட்டங்களை மீறும் செயல்’

எழுத்தாளர் Bella Dalima

12 Feb, 2015 | 4:53 pm

புகலிடக் கோரிக்கையாளர்களின் பிள்ளைகளை முகாம்களில் தடுத்து வைப்பது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரசாங்க நிதியுதவியில் இயங்கும் இந்த ஆணைக்குழு, நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கை ஒன்றில், தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்படும் சிறார்கள் எதிர்கொள்ளும் உடல், உள ரீதியான மற்றும் பாலியல் ரீதியான துன்பங்களை விபரித்துள்ளது.

இது குறித்த ஒரு தேசிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு, அந்தச் சிறார்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை அவுஸ்திரேலிய தலைமை அரச வழக்கறிஞர், ஜோர்ஜ் பிராண்டிஸ் மறுத்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்