சொத்து விபரங்களை வழங்க முடியுமா: ரவி கருணாநாயக்க கோத்தபாயவிற்கு சவால்

சொத்து விபரங்களை வழங்க முடியுமா: ரவி கருணாநாயக்க கோத்தபாயவிற்கு சவால்

எழுத்தாளர் Bella Dalima

12 Feb, 2015 | 8:28 pm

தனது சொத்து விபரங்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்தத் தயார் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமது சொத்து சேகரிப்பு குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஊடகத்திற்கு வழங்கியிருந்த செவ்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரவி கருணாநாயக்க தெரிவித்ததாவது;

[quote]நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே அந்த வீட்டில் குடியிருக்கின்றேன். 1993 ஆம் ஆண்டில் தான் காணியை வாங்கினேன். 94 ஆம் ஆண்டில் வீட்டைக் கட்டினேன். நான் 94 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி உறுப்பினரானேன். 1993 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலான சொத்து விபரங்கள் இந்த இடத்தில் உள்ளது. உங்களால் அதனைப் பார்வையிட முடியும். இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு மூன்று தடவைகள் விசாரணை செய்து விடுவித்துள்ளது. கோத்தபாய ராஜபக்ஸவிடம் நான் கேட்கின்றேன், நாளை காலை உங்களது சொத்து விபரங்களை வழங்க முடியுமா ? 2005 ஆம் ஆண்டிலிருந்து சொத்து விபரங்களை இவ்வாறான ஊடக சந்திப்பொன்றை நடத்தி தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். இதேபோன்று எம்மை அகௌரவப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்