ஐ.ம.சு. கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளர் புதிய முகமாக இருக்க வேண்டும் – பிரசன்ன ரணதுங்க

ஐ.ம.சு. கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளர் புதிய முகமாக இருக்க வேண்டும் – பிரசன்ன ரணதுங்க

ஐ.ம.சு. கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளர் புதிய முகமாக இருக்க வேண்டும் – பிரசன்ன ரணதுங்க

எழுத்தாளர் Bella Dalima

12 Feb, 2015 | 7:17 pm

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளர் புதிய முகமாக இருக்க வேண்டும் என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

[quote]சந்திரிக்கா குமாரதுங்க கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டால் பாரிய அளவில் அவருக்கு வாக்குகள் கிடைக்கும். அதேபோன்று, மஹிந்த ராஜபக்ஸ போட்டியிட்டால் தெற்கில் அதிகூடிய வாக்குகள் கிடைக்கும். மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கி இதனை முன்னெடுத்தால் பாரிய சக்தியாகவே அமையும். ஆனால், தற்போது அவர் தலைவராகிவிட்டார். கடந்த காலங்களில் இரண்டாம் நிலைத் தலைவர்களை நாம் உருவாக்கவில்லை. ஆகவே, மூன்று பேரும் விரும்பும் ஒருவரை முன்வைத்து இந்தப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன். தோல்வி அடைவோம் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. தற்போது தான் இரண்டாம் நிலை வரிசை குறித்து ராஜபக்ஸ சிந்திக்கின்றார். ஆனால் காலம் கடந்து விட்டது.[/quote]

என்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்