English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
12 Feb, 2015 | 11:51 am
உலகக்கிண்ணத் தொடரின் தொடக்கவிழா இன்று, அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன், நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் என, இரு இடங்களில் ஒரே நேரத்தில் நடக்கிறது.
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 14 அணிகள் பங்கேற்கும் 11ஆவது உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 14ஆம் திகதி தொடங்குகிறது. மார்ச் 29ஆம் திகதி வரை, இத்தொடரில் மொத்தம் 49 போட்டிகள் நடக்கவுள்ளன. .
இதற்கான தொடக்க விழா, இரண்டு நாள் முன்னதாக இன்று மெல்போர்ன், கிறைஸ்ட்சர்ச் என, இரு இடங்களில் ஒரே நேரத்தில் நடக்கின்றன. இலங்கை நேரப்படி மதியம் 2.00 மணிக்கு விழா ஆரம்பிக்கின்றது.
மெல்போர்னின் ‘சிட்னி மையர் மியூசிக் பவுல்’ என்ற திறந்தவெளி மைதானத்தில் நடக்கும் விழாவில், தொடரில் பங்கேற்கும் வீரர்கள், முன்னாள் ‘கிரிக்கெட் வீரர்கள்’ கலந்து கொள்கின்றனர்.
முதலில் வீரர்கள் அணிவகுப்பு அடுத்த தொடக்கவிழா உரையை தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும். அவுஸ்திரேலியாவை சேர்ந்த பாப் பாடகிகள் ஜெசிகா மாவ்பாய், டினா அரினா உள்ளிட்டோருடன் சிம்பொனி இசைக் கலைஞர் சோங் லிம்மும் திறமை வெளிப்படுத்த உள்ளனர்.
நியூசிலாந்தில் நடக்கும் விழாவில் உள்ளூர் அணிகள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ரிச்சர்ட் ஹட்லீ, ஸ்டீபன் பிளமிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். முதலில் வரவேற்பு நிகழ்ச்சி, அடுத்து பூகம்பத்தில் இருந்து கிறைஸ்ட்சர்ச் நகரம் மீண்டெழுந்தது குறித்து காண்பிக்கப்படவுள்ளது.
நியூசிலாந்து பாடகி கினி பிளாக்மோர், ‘சோல் 3 மியோ’ குழுவினரின் இசை நிகழ்ச்சி அரங்கேறுகின்றது. முடிவில், கிறைஸ்ட்சர்ச் நகரம் இதுவரை கண்டிராத வகையில், வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.
19 Jan, 2021 | 09:09 PM
29 Dec, 2020 | 01:17 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS