இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இந்திய அமைப்பு முறையிலான தீர்வே உகந்தது: வீ. ஆனந்தசங்கரி

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இந்திய அமைப்பு முறையிலான தீர்வே உகந்தது: வீ. ஆனந்தசங்கரி

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இந்திய அமைப்பு முறையிலான தீர்வே உகந்தது: வீ. ஆனந்தசங்கரி

எழுத்தாளர் Bella Dalima

12 Feb, 2015 | 5:25 pm

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இந்திய முறையிலான அமைப்பே அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாக அமையும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது.

இந்தத் தீர்வு விடயம் குறித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் எனத் தெரிவித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி கோரிக்கைக் கடிதமொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

இந்திய அமைப்பு முறையிலான தீர்வு குறித்து 2001 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் அரசியல் தலைவர்களுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் தாம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதற்கு எவ்வித மாற்றுக்கருத்துகளும் எவராலும் முன்வைக்கப்படவில்லை எனவும் வீ. ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்