வரவுசெலவுத் திட்டத்தில் திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிப்பு

வரவுசெலவுத் திட்டத்தில் திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிப்பு

வரவுசெலவுத் திட்டத்தில் திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Feb, 2015 | 9:03 am

வரவுசெலவுத் திட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சட்டமூலத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வாசிப்பு இன்று இடம்பெறவுள்ளதாக பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

இந்த அவசர சட்ட மூலத்தின் மீதான விவாதம் எதிர்வரும் ஆறாம் ஏழாம் திகதிகளில் நடைபெறவுள்ளது. பாராளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கூடவுள்ளது.

புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் முதலாவது இடைக்கால வரவு செலவுத் திட்டம் கடந்த மாதம் 29 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்