முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்த்தனவின் கடவுச்சீட்டை இரத்துச் செய்யுமாறு உத்தரவு

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்த்தனவின் கடவுச்சீட்டை இரத்துச் செய்யுமாறு உத்தரவு

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்த்தனவின் கடவுச்சீட்டை இரத்துச் செய்யுமாறு உத்தரவு

எழுத்தாளர் Kanthaverl Mayooran

02 Feb, 2015 | 12:25 pm

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்த்தனவின் கடவுச்சீட்டை இரத்துச் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிகான் பிலபிட்டிய இன்று குடிவரவு, குடியல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் சட்ட வல்லுனரான சட்டத்தரணி அசித்த அன்டெனி நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊழல் மற்றும் மோசடி தொடர்பான 107 குற்றச்சாட்டுக்குள் அவருக்கு எதிராக தமது ஆணைக்குழுவில் பதிவாகியுள்ளதாக அசித்த அன்டெனி குறிப்பிட்டுள்ளார்.

சரண குணவர்த்தன வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புள்ளதால், அது முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்பதால், அவர் வெளிநாடு செல்வதை தடைசெய்யுமாறு சட்டத்தரணி கோரியிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்