முகத்துவாரம் பகுதியிலுள்ள வீடொன்றில் கப்பம் பெறச் சென்ற இராணுவ உறுப்பினர்கள் கைது

முகத்துவாரம் பகுதியிலுள்ள வீடொன்றில் கப்பம் பெறச் சென்ற இராணுவ உறுப்பினர்கள் கைது

முகத்துவாரம் பகுதியிலுள்ள வீடொன்றில் கப்பம் பெறச் சென்ற இராணுவ உறுப்பினர்கள் கைது

எழுத்தாளர் Kanthaverl Mayooran

02 Feb, 2015 | 12:29 pm

கொழும்பு, முகத்துவாரம் பகுதியிலுள்ள வீடொன்றில் கப்பம் பெற்றுக்கொள்வதற்காகச் சென்ற 04 இராணுவ உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டிலிருந்த பெண்ணால், பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, இராணுவ உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.

இதேவேளை, இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து இதுதொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பதில் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர குறிப்பிட்டார்.

விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு இராணுவத் தளபதி அறிவித்துள்ளதாகவும் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர மேலும் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்