மாஓயாவில் அடித்துச் செல்லப்பட்ட யுவதியை காப்பாற்றச் சென்ற இளைஞன் உயிரிழப்பு

மாஓயாவில் அடித்துச் செல்லப்பட்ட யுவதியை காப்பாற்றச் சென்ற இளைஞன் உயிரிழப்பு

மாஓயாவில் அடித்துச் செல்லப்பட்ட யுவதியை காப்பாற்றச் சென்ற இளைஞன் உயிரிழப்பு

எழுத்தாளர் Kanthaverl Mayooran

02 Feb, 2015 | 11:25 am

மீரிகம, மாஓயாவில் அடித்துச் செல்லப்பட்ட யுவதியை காப்பாற்றுவதற்கு முயற்சித்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மற்றுமொரு இளைஞன் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த யுவதி தனது சகோதரர் மற்றும் உறவினருடன் ஆற்றுக்கு நீராடச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று மாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பிரதேசவாசிகளால் அந்தப் பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்.

காணாமற்போன இளைஞனை தேடும் பணிகளுக்கு கடற்படையினரதும், பொலிஸ் உயிர்ப் பாதுகாப்பு பிரிவினரினதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, உப்புவெளி பொலிஸ் பிரிவின் நிலாவெளி கடலில் மூழ்கிய இளைஞரொருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா சென்றிருந்த குறித்த இளைஞன் கடலில் நீராடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், நீரில் மூழ்கியபோது, அங்கிருந்த பாதுகாப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்