பேக்கரி உற்பத்திகளின் விலை இன்றுமுதல் குறைப்பு

பேக்கரி உற்பத்திகளின் விலை இன்றுமுதல் குறைப்பு

பேக்கரி உற்பத்திகளின் விலை இன்றுமுதல் குறைப்பு

எழுத்தாளர் Kanthaverl Mayooran

02 Feb, 2015 | 10:40 am

பணிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இதற்கமைய, கோதுமை மா பேக்கரி உற்பத்திகளின் விலையை 1 ரூபா முதல் 5 ரூபா வரையில் குறைக்க  நடவடிக்கை எடுத்துள்ளதாக சங்கத்தின்  தலைவர் என்.கே ஜயவர்தன குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்வகையில் பாணின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்